இராசி, அம்சம்.

நாழிகை: ஒரு நாளில் ஒரு மனிதன் சுவாசிக்கக்கூடிய சுவாசங்களின் எண்ணிக்கை 21,600 ஆகும். இந்த 21,600 தான் ஒருவருடத்தின் மொத்த நாழிகை.

24 நிமிடம் கொண்டது ஒரு நாழிகை. ஒரு நாளைக்கு 60 நாழிகைகள்.
ஒரு மாதத்திற்கு 1,800, ஒரு வருடத்திற்கு 21,600 நாழிகை.

சூரிய உதயத்திலிருந்து நாழிகை கணக்கிடப்படுகிறது. ஜாதகம் கணிப்பதற்கு சூரிய உதயமே முக்கியத்துவமாக உள்ளது. கிரக தசா புத்தி கணக்கிற்கும் கிரகஸ்புடம் என்ற கணக்கிற்கும் இந்த நாழிகை கணக்குத்தான் ஏளிதாக பொருந்த வரும். இது யுகம் யுகமாக பயன்படுத்தப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் முதுகெலும்பு இது.

பூமியானது சூரியனை ஓர் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு முழு வட்டமாக சுற்றிவருகிறது. புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் கிட்டதட்ட பூமியின் சுற்றுப் பாதை அமைப்பிலேயே சூரியனைச் சுற்றி வருகின்றன.

இந்த சூரிய மண்டல உறுப்பினர்களுக்கும் பூமியில் நடக்கும் சம்பவங்களுக்குமிடையே உள்ள உறவைப்பற்றி சொல்லக்கூடியதாக ஜோதிட சாஸ்திரம் அமைந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்ற சூரியன் முதலான இந்த கிரங்களின் இயக்கமானது பூமியில் இருந்தவாறே உற்று நோக்கப்படுகிறது. கிரகங்கள் நகரும் இந்த வட்டப்பாதையானது ராசி மண்டலம் எனப்படும்.

இந்த ராசி மண்டலம் 12 பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிற்கும் ஒரு அடையாளச்சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. ராசி மண்டலத்து 12 பிரிவுகளுக்குரிய இந்த அடையாளச் சின்னம் ஒரு வரிசைக் கிரமத்தில் அமைந்துள்ளது.

ஜெனன ஜாதகம் ஒருவரின் பிறந்த தேதி, நேரம், இடம், ஆகியவற்றைக் கணக்கிலே கொண்டு மிகதுல்லியமாக கணக்கிடப்பட வேண்டும்.

இதில் லக்னம் பிரதான அங்கம் வகிக்கிறது. ஒருநாளில் சூரியன் 12 லக்னங்களை கடந்து வருகிறார். ஒரு குழந்தை பிறக்கும் போது சூரியன் எந்த லக்னத்தை கடந்து கொண்டு இருக்கிறாரோ அது ஜனன லக்னம் ஆகும்.

ராசி என்பது உடல், அம்சம் என்பது ஆத்மா.

ஒரு ராசியில் உள்ள ஒரு கிரகமானது ஒன்பது வித்தியாசமன நிலைகளில் அமர்ந்து இருக்கும். அது எந்த நிலையில் உள்ளது என்பதே அம்சமாகும்.

இராசிக்கட்டத்தில் உச்சம் பெற்ற ஒரு கிரகம் அம்சத்தில் நீசமாக இருந்தால் அது ஒன்றுக்கும் உதவாத பலம் அற்ற கிரகமாக ஆகிவிடும். அதே போல நீசம் பெற்ற ஒருகிரகம் அம்சத்தில் உச்சம் பெற்றால் அது அதிக சக்தி பெற்றதாக ஆகிவிடும்.

இராசியில் உச்சம்பெற்ற கிரகம் நீசம் பெற்ற ஒரு கிரகத்தின் நட்சத்திரத்தில் நின்றால் அது பலமிழந்துவிடும். அதனால் நீசம் பெற்ற ஒரு கிரகம் உச்சம் பெற்ற
ஒருகிரகத்தின் நட்சத்திரத்தில் நின்றால் அது பூரன பலம் பெற்றதாகிவிடும்.

இராசிக்கட்டம் என்பது கிரகங்களின் வெளித்தோற்றத்தை மட்டுமே காட்டும். அம்சக் கட்டமே அதனதன் உண்மையான பலத்தைக் காட்டும்.

குறிப்பு:

கோதுளி லக்னம்: ஒவ்வொருநாள் சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் கோதுளி லக்னம் எனப்படும். இதில் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றிபெறும்.

மனு சாஸ்திரம்: இது உருவாக்கப்பட்டபோது இதில் ஒரு லட்சம் சூத்திரங்கள் இருந்தன. நாளடைவில் அவை மறைந்து தற்பொழுது 2000க்கும் குறைவான சூத்திரங்களே உள்ளன.

ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய தர்ம நெறிகள்பற்றி இதில் விரிவாக கூறப்பட்டுள்ளது. நம்மக்களிடையே பழகிப்போன பல பழக்கவழக்கங்கள் இந்த மனு சாஸ்திரத்தில் இருந்தே வந்தனவாகும். சமுதாயத்திற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஏற்பட்ட அனுபவங்களே இது என கூறுவர்.

0 கருத்துகள்:

 


ஜோதிடக்கலை - Templates Novo Blogger 2008
This template is brought to you by : allblogtools.com Blogger Templates