இராசி, அம்சம்.

நாழிகை: ஒரு நாளில் ஒரு மனிதன் சுவாசிக்கக்கூடிய சுவாசங்களின் எண்ணிக்கை 21,600 ஆகும். இந்த 21,600 தான் ஒருவருடத்தின் மொத்த நாழிகை.

24 நிமிடம் கொண்டது ஒரு நாழிகை. ஒரு நாளைக்கு 60 நாழிகைகள்.
ஒரு மாதத்திற்கு 1,800, ஒரு வருடத்திற்கு 21,600 நாழிகை.

சூரிய உதயத்திலிருந்து நாழிகை கணக்கிடப்படுகிறது. ஜாதகம் கணிப்பதற்கு சூரிய உதயமே முக்கியத்துவமாக உள்ளது. கிரக தசா புத்தி கணக்கிற்கும் கிரகஸ்புடம் என்ற கணக்கிற்கும் இந்த நாழிகை கணக்குத்தான் ஏளிதாக பொருந்த வரும். இது யுகம் யுகமாக பயன்படுத்தப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் முதுகெலும்பு இது.

பூமியானது சூரியனை ஓர் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு முழு வட்டமாக சுற்றிவருகிறது. புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் கிட்டதட்ட பூமியின் சுற்றுப் பாதை அமைப்பிலேயே சூரியனைச் சுற்றி வருகின்றன.

இந்த சூரிய மண்டல உறுப்பினர்களுக்கும் பூமியில் நடக்கும் சம்பவங்களுக்குமிடையே உள்ள உறவைப்பற்றி சொல்லக்கூடியதாக ஜோதிட சாஸ்திரம் அமைந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்ற சூரியன் முதலான இந்த கிரங்களின் இயக்கமானது பூமியில் இருந்தவாறே உற்று நோக்கப்படுகிறது. கிரகங்கள் நகரும் இந்த வட்டப்பாதையானது ராசி மண்டலம் எனப்படும்.

இந்த ராசி மண்டலம் 12 பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிற்கும் ஒரு அடையாளச்சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. ராசி மண்டலத்து 12 பிரிவுகளுக்குரிய இந்த அடையாளச் சின்னம் ஒரு வரிசைக் கிரமத்தில் அமைந்துள்ளது.

ஜெனன ஜாதகம் ஒருவரின் பிறந்த தேதி, நேரம், இடம், ஆகியவற்றைக் கணக்கிலே கொண்டு மிகதுல்லியமாக கணக்கிடப்பட வேண்டும்.

இதில் லக்னம் பிரதான அங்கம் வகிக்கிறது. ஒருநாளில் சூரியன் 12 லக்னங்களை கடந்து வருகிறார். ஒரு குழந்தை பிறக்கும் போது சூரியன் எந்த லக்னத்தை கடந்து கொண்டு இருக்கிறாரோ அது ஜனன லக்னம் ஆகும்.

ராசி என்பது உடல், அம்சம் என்பது ஆத்மா.

ஒரு ராசியில் உள்ள ஒரு கிரகமானது ஒன்பது வித்தியாசமன நிலைகளில் அமர்ந்து இருக்கும். அது எந்த நிலையில் உள்ளது என்பதே அம்சமாகும்.

இராசிக்கட்டத்தில் உச்சம் பெற்ற ஒரு கிரகம் அம்சத்தில் நீசமாக இருந்தால் அது ஒன்றுக்கும் உதவாத பலம் அற்ற கிரகமாக ஆகிவிடும். அதே போல நீசம் பெற்ற ஒருகிரகம் அம்சத்தில் உச்சம் பெற்றால் அது அதிக சக்தி பெற்றதாக ஆகிவிடும்.

இராசியில் உச்சம்பெற்ற கிரகம் நீசம் பெற்ற ஒரு கிரகத்தின் நட்சத்திரத்தில் நின்றால் அது பலமிழந்துவிடும். அதனால் நீசம் பெற்ற ஒரு கிரகம் உச்சம் பெற்ற
ஒருகிரகத்தின் நட்சத்திரத்தில் நின்றால் அது பூரன பலம் பெற்றதாகிவிடும்.

இராசிக்கட்டம் என்பது கிரகங்களின் வெளித்தோற்றத்தை மட்டுமே காட்டும். அம்சக் கட்டமே அதனதன் உண்மையான பலத்தைக் காட்டும்.

குறிப்பு:

கோதுளி லக்னம்: ஒவ்வொருநாள் சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் கோதுளி லக்னம் எனப்படும். இதில் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றிபெறும்.

மனு சாஸ்திரம்: இது உருவாக்கப்பட்டபோது இதில் ஒரு லட்சம் சூத்திரங்கள் இருந்தன. நாளடைவில் அவை மறைந்து தற்பொழுது 2000க்கும் குறைவான சூத்திரங்களே உள்ளன.

ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய தர்ம நெறிகள்பற்றி இதில் விரிவாக கூறப்பட்டுள்ளது. நம்மக்களிடையே பழகிப்போன பல பழக்கவழக்கங்கள் இந்த மனு சாஸ்திரத்தில் இருந்தே வந்தனவாகும். சமுதாயத்திற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஏற்பட்ட அனுபவங்களே இது என கூறுவர்.

ஜோதிடத்தில் உள்ள பிரிவுகள்

ஜோதிடம் என்பது சகலதரப்பு மக்களையும் தன்பால் கவர்ந்து இழுக்கக் கூடிய வசீகரம் மிக்கதொரு கலை.

தெய்வீகத்தோடும் வான சாஸ்திரத்தோடும் உறவுகொண்ட உன்னதமான கலை.

இது ரிக்-யஜீர்-சாம-அதர்வணம் என்னும் நான்கு வேதங்களுலும் முதன்மையான ரிக் வேதத்தின் சாரமாகும்.

ஜோதிட சாஸ்திரமானது

1. கணித ஸ்கந்தம்,

2. ஜாதக ஸ்கந்தம்,

3. சம்மிதாஸ்கந்தம்

என்னும் மூன்று பிரிவுடையது.

கணித ஸ்கந்தத்தில் கணித முறைகள் கூறப்பட்டுள்ளது.

இது சித்தாந்தக் கணிதம், தந்திரக் கணிதம், கரணக் கணிதம் என மேலும் 3 வகைப்படும்

சித்தாந்தக் கணிதமானது சிருஷ்டி காலந்தொட்டும், தந்திரக் கணிதமானது ஒவ்வொரு யுகம் ஆரம்ப கால முதலாகவும், கரணக் கணிதம் இஷ்டக், சக்வருடம் முதலாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜாதக ஸ்கந்தத்தில் பாவம் பற்றி கூறப்பட்டுள்ளது. இது ஹோரை, தாஜிகம் என இருவகைப்படும்

ஹோரா சாஸ்திரத்தில் பிறந்தகால கிரகநிலைகளால் உண்டாகும் பலாபலன்கள், தாஜிக சாஸ்திரத்தில் அந்ததந்த வயது ஆரம்ப கால கிரக் நிலைகளால் உண்டாகும் பலன்கள் கூறப்படுகிறது.

சம்மிதாஸ்கந்தத்தில் ஆரூடம் அல்லது முகூர்த்தம் பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும் வாஸ்து சாஸ்திரம் பற்றியும், வேளாண்மைக்குரிய வருஷ பணிசக்கரம் பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளது. ஒருவன் தினந்தோறும், மாதம்தோறும், வருடம்தோறும் செய்ய வேண்டிய கர்மாக்களுக்கு நல்ல கால நிர்ணயம் பற்றி முகூர்த்தம் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளது.

தேவாலயம், அரண்மனை, வீடு, மடம், குளம், கிணறு முதலியவற்றை நிர்ணயிக்கும் சாஸ்திரம் வாஸ்து என்ற தலைப்பில் உள்ளது.

உலகசுபிட்சங்கள், துர்பிட்சங்கள், மழை சம்பந்தப்பட்ட விஷயங்கள் வருஷ பணி சக்கரம் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரச்னம், சரம், பஞ்சபட்சி, நட்டமுட்டி சிந்தனை முதலிய விசயங்கள் ஆரூடம் என்ற தலைப்பில் உள்ளது.

இவ்வாறு மூன்று பிரிவுகளாக ஜோதிடசாஸ்திரம் பிரபஞ்சம் தேன்றிய காலத்திலேயே தோன்றியதாகும்.

ஜோதிடத்தின் அடிப்படை


ஜோதிடத்தின் அடிப்படை:

வானியல் சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது ஜோதிடம்.
வேத காலத்தில் அறிவியல் ஆன்மீகம் இரண்டும் இருந்தது.
அறிவியலின் ஒரு பகுதிதான் ஜோதிடம்.
ஜோதிடத்தில் சித்தாந்தம், சம்ஹிதை ஜாதகம் ஆகிய பிரிவுகள் உள்ளன.
சித்தாந்தம் என்பது வானியல்.
ஜாதகம் என்பது பலன் உரைத்தல்.
சம்ஹிதை என்பது ஜோதிடத்தை அறிவியல் என்பதை விளக்கும் பகுதி.
அறிவியல் ஆன்மீகம் இரண்டையும் இணைக்கும் பாலம்தான் சம்ஹிதை.

அறிவியல் என்பது காரண காரிய அளவைகளைக்கொண்டு ஆராய்வது.
இதற்கு தொடக்கமும் முடிவும் தேவை. ஆனால் ஆன்மீகம் இவற்றை தாண்டி நிற்பது.
ஆன்மீகம் என்பது இயற்பியலுக்கும் காரண காரியங்களுக்கும் அப்பால் சிந்திப்பது ஆகும்.

ஆன்மீகம் எவ்வாறு அறிவியலோடு பல நிலைகளில் பொருந்திப்போகிறது.

நிலையில்லா பொருள்-நிர் குண பிரம்மம்
உத்வேக ஆற்றல் - பராசக்தி
திடப் பொருள் - சிவசக்தி
எதிர்பொருள் - காளி, ருத்ரன்
குவாண்டம் - அர்த்தநாரி
எல்லையற்ற பிரபஞ்சம் - பாற்கடல்,

இவ்வாறு பொருந்துகிறது.

ஜோதிடத்திற்கு அடிப்படை வானியல் சாஸ்திரம்,
இதில் 7 கிரகங்கள் உள்ளன.
மேலும் பூமியையும் சூரியனையும் சந்திரன் சுற்றுவதால் ஏற்படும் ராகு கேது என்ற இரு புள்ளிகளும் உள்ளன.

பூமியில் ஏற்படும் நில நடுக்கம், பூகம்பம், மழை, புயல், வெள்ளம், வறட்சி, மனிதர்கள் பிறப்பது, இறப்பது, நோய் தாக்குதல் நல்ல நிகழ்ச்சி ஏற்பட இவையே காரணம். இவற்றை கணித்துக் கூறுவதே ஜோதிடம்

கணிதம், காலம், அளவையியல், வானியல் ஆகியவற்றின் வெளிப்பாடுதான் ஜோதிடம்.

மனிதனை ஜோதிடம் நட்சத்திரம், ராசி, லக்கினம் என்ற அடிப்படையில் பிரிக்கிறது.
மரபியல் மரபுக்கூறுகளின் அடிப்படையில் பிரிக்கிறது.
மரபணு சோதனை மூலம் நோயற்ற மனிதனை உருவாக்குவது போல்
ஜோதிடம்மூலம் செய்யப்படும் திருமணப்பொருத்தம் தலை சிறந்த சந்ததிகளை உருவாக்கும்.

 


ஜோதிடக்கலை - Templates Novo Blogger 2008
This template is brought to you by : allblogtools.com Blogger Templates