ஜோதிடத்தில் உள்ள பிரிவுகள்

ஜோதிடம் என்பது சகலதரப்பு மக்களையும் தன்பால் கவர்ந்து இழுக்கக் கூடிய வசீகரம் மிக்கதொரு கலை.

தெய்வீகத்தோடும் வான சாஸ்திரத்தோடும் உறவுகொண்ட உன்னதமான கலை.

இது ரிக்-யஜீர்-சாம-அதர்வணம் என்னும் நான்கு வேதங்களுலும் முதன்மையான ரிக் வேதத்தின் சாரமாகும்.

ஜோதிட சாஸ்திரமானது

1. கணித ஸ்கந்தம்,

2. ஜாதக ஸ்கந்தம்,

3. சம்மிதாஸ்கந்தம்

என்னும் மூன்று பிரிவுடையது.

கணித ஸ்கந்தத்தில் கணித முறைகள் கூறப்பட்டுள்ளது.

இது சித்தாந்தக் கணிதம், தந்திரக் கணிதம், கரணக் கணிதம் என மேலும் 3 வகைப்படும்

சித்தாந்தக் கணிதமானது சிருஷ்டி காலந்தொட்டும், தந்திரக் கணிதமானது ஒவ்வொரு யுகம் ஆரம்ப கால முதலாகவும், கரணக் கணிதம் இஷ்டக், சக்வருடம் முதலாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜாதக ஸ்கந்தத்தில் பாவம் பற்றி கூறப்பட்டுள்ளது. இது ஹோரை, தாஜிகம் என இருவகைப்படும்

ஹோரா சாஸ்திரத்தில் பிறந்தகால கிரகநிலைகளால் உண்டாகும் பலாபலன்கள், தாஜிக சாஸ்திரத்தில் அந்ததந்த வயது ஆரம்ப கால கிரக் நிலைகளால் உண்டாகும் பலன்கள் கூறப்படுகிறது.

சம்மிதாஸ்கந்தத்தில் ஆரூடம் அல்லது முகூர்த்தம் பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும் வாஸ்து சாஸ்திரம் பற்றியும், வேளாண்மைக்குரிய வருஷ பணிசக்கரம் பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளது. ஒருவன் தினந்தோறும், மாதம்தோறும், வருடம்தோறும் செய்ய வேண்டிய கர்மாக்களுக்கு நல்ல கால நிர்ணயம் பற்றி முகூர்த்தம் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளது.

தேவாலயம், அரண்மனை, வீடு, மடம், குளம், கிணறு முதலியவற்றை நிர்ணயிக்கும் சாஸ்திரம் வாஸ்து என்ற தலைப்பில் உள்ளது.

உலகசுபிட்சங்கள், துர்பிட்சங்கள், மழை சம்பந்தப்பட்ட விஷயங்கள் வருஷ பணி சக்கரம் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரச்னம், சரம், பஞ்சபட்சி, நட்டமுட்டி சிந்தனை முதலிய விசயங்கள் ஆரூடம் என்ற தலைப்பில் உள்ளது.

இவ்வாறு மூன்று பிரிவுகளாக ஜோதிடசாஸ்திரம் பிரபஞ்சம் தேன்றிய காலத்திலேயே தோன்றியதாகும்.

0 கருத்துகள்:

 


ஜோதிடக்கலை - Templates Novo Blogger 2008
This template is brought to you by : allblogtools.com Blogger Templates